ராணிப்பேட்டையில் பரபரப்பு! சாலையில் ஓட ஓட அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்!

Two passed away in Ranipet police investigation

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு (40). அதே ஊரைச் சேர்ந்த்வர் சரவணன் (35). இவர்கள் இருவரையும் நேற்று (01.01.2023) மாலை சாலையில் ஓட ஓட துரத்திச் சென்று ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதைப் பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெட்டப்பட்ட குழந்தைவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரவணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் ,அவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

Two passed away in Ranipet police investigation

இந்தச் சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர்களுடன் மதுவருந்திய லாரி டிரைவர் ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

police ranipet
இதையும் படியுங்கள்
Subscribe