Advertisment

இருசக்கர வாகனத்தில் ஆட்டோ மோதியதில் இருவர் உயிரிழப்பு!

Cuddalore incident

Advertisment

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள கட்டியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மலர்க்கொடி, பாக்கியலட்சுமி, ரமணி, சிவகாமி, நிஷாந்தி, சின்னப்பொண்ணு, செண்பகம், புஷ்பா ஆகிய எட்டு பெண்கள் அமாவாசை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குச் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது புதுப்பேட்டைச் சாலையில் அம்மாபேட்டை என்கிற இடத்தில் எதிரே வேகமாக வந்த இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சதீஷ்(29), என்ற இளைஞரும், ஆட்டோவில் பயணம் செய்த புஷ்பா(45) என்ற பெண்ணும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த மலர்க்கொடி, பாக்கியலட்சுமி, ரமணி உள்ளிட்ட 7 பெண்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஹரிதாஸ் உள்பட 8 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சம்பந்தமாகப் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incidnet Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe