Advertisment

கருணாஸ் மீது மேலும் இரு வழக்கு! தூசு தட்டப்படும் ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம்!!

Kaunas

அரசு மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும், திருவாடனை எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.

Advertisment

அதன்பின் எழும்பூரில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Advertisment

இந்நிலையில் இன்று காவலில் விசாரிக்க காவல்துறை நீதிமன்றத்தில் கோரியிருந்தது. தற்போது இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில்கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராடியது தொடர்பாக தற்போது இரு வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படிவரிசைகட்டும் வழக்குகளால் சிறையில் வாடிபோயுள்ளாராம் கருணாஸ்.

protest against ipl competition police arrest karunas
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe