Two more arrested in vannarapet case

Advertisment

சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை அடுத்தடுத்து காவல்துறை கைதுசெய்த நிலையில், மேலும் அந்த வரிசயைில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகிதாபானு, சகிதாபானுவின் காதலன்மற்றும் இடைத்தரகர்கள் என 12 பேரை முதலில் கைது செய்தது காவல்துறை.

இந்த 12 பேரையும் விசாரணை செய்ததில் அடுத்தடுத்து, ஆய்வாளர் புகழேந்தி, பா.ஜ.கபிரமுகர் ராஜேந்திரன், செய்தியாளர் வினோபாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து நேற்று முன்தினம் ஃபோட்டோகிராபர் கிரிதரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

Advertisment

கிரிதரனின் செல்ஃபோன் மூலமாக கிடைத்த நம்பரை வைத்து விசாரணை செய்ததில், குரோம்பேட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் ராஜசுந்தரம் என்பவரை கைது செய்து விசாரித்தது. அதில்,இவரும் அந்தச் சிறுமியை தன் இச்சைக்குப் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்தது. இதற்கு இடைத்தரகாராகச் செயல்பட்டது கஸ்தூரி என்கிற அனிதா என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. அனிதாவை விசாரணையில் ஈடுபடுத்திவரும் நிலையில் மேலும் பலர் சிக்குவார்கள் எனத் தெரியவருகிறது.