Advertisment

காவிரியில் குளிக்கச் சென்ற இருவரைக் காணவில்லை... தேடும் பணி தீவிரம்!

Cauvery

திருச்சி அருகே காவிரியில் குளிக்கச் சென்ற இரண்டு பேர் மாயமான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருச்சி முத்தரசநல்லூர் முருங்கபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவர் அந்தப் பகுதியில் உள்ள தியான மையத்தில் தோட்ட தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்டான்லி (வயது 37), டேவிட் (35) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

Advertisment

இதில் ஸ்டான்லி திருச்சி விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் மின்ஊழியராகப் பணியாற்றி வந்தார். டேவிட் காரைக்கால் கப்பல் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். ஸ்டான்லி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வசித்து வருகிறார். இவரது மனைவி மேனகாஅங்குள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜோயல் (9) என்ற மகன் உள்ளார். நடேசனின் 2 மகன்களும் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தந்தை நடேசன் வேலை பார்க்கும் தியான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் 03.08.2020 மதியம் ஜோயல், தனது சித்தப்பாவான டேவிட்டுடன் தியான நிலையம் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் செல்வதாகச் சென்றனர். ஆனால் அவர்கள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடேசன் அவர்களைத் தேடி காவிரி ஆற்றுக்கு வந்தார். அப்போது, காவிரி கரையில் அவர்கள் கொண்டுவந்த துண்டு, சோப்பு டப்பா கரையில் இருந்தது. ஆனால் இருவரையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அப்பகுதி மக்களின் உதவியுடன் மகனையும், பேரனையும் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.

இது குறித்து திருச்சி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து நீண்டநேரம் தேடினர். அதன்பின்னும் அவர்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் இரவு நேரமானதால், தேடமுடியவில்லை. மேலும் அவர்களது கதி என்ன என்றே தெரியவில்லை. இன்று மீண்டும் தேடுவதாகத் தீயணைப்பு வீரர்கள் கூறிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சித்தப்பாவும், சிறுவனும் காவிரி ஆற்றுக்குள் காணாமல் போனதால், அவர்களது உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். மாயமான ஜோயல் 3 -ஆம் வகுப்பு படித்து வந்தார். தொடர்ந்து 2 -ஆவது நாளாக சித்தப்பா மற்றும் அண்ணன் மகனை தேடும் பணி நடந்து வருகிறது.

accident cauvery
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe