ADVERTISEMENT

‘உண்மையை சொன்னால் என் குடும்பத்தை கொன்று விடுவார்கள்’ - போலீஸ் விசாரணையில் பரபரப்பு

06:02 PM Apr 11, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே உள்ள முடசல் ஓடை மீனவ கிராம பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக டீசல் பங்க் உள்ளது. இதில் கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்த பழனிவேல் மகன் சுதாகர்(51), பண்ருட்டி ரெட்டிபாளையம் ஜெயராமன் மகன் செல்வகுமார்(38) ஆகிய இருவரும் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக டீசல் பங்கில் வசூலான பணத்தை செல்வகுமார் சுதாகரிடம் கொடுத்து வங்கிக் கணக்கில் கட்டுமாறு கூறியுள்ளார். தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கி விடுமுறை என்பதால் சுதாகர் பணத்தை வீட்டில் வைத்திருந்து திங்கட்கிழமை சிதம்பரம் மேல வீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக வங்கிக் கணக்கில் 6 லட்சத்து 4500 ரூபாயைக் கட்டியுள்ளார்.

பணத்தைப் பெற்ற வங்கி மேலாளர் வீரபத்திரன் அதில் ரூ. 52 ஆயிரத்திற்கு நகல் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டறிந்து சிதம்பரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் டீசல் பங்க் ஊழியர்களான செல்வகுமார், சுதாகர் ஆகிய இருவரையும் அழைத்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த கள்ள நோட்டு கும்பல் குறித்து உண்மை தகவலை கூறினால் எனது குடும்பத்தை கொன்று விடுவார்கள். எனவே தங்களை எது வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT