Skip to main content

இருவழிச்சாலை அமைக்கும் பணி; பாதிக்கப்படும் வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதில் சிக்கல்!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

Two-lane construction work; Problems in providing compensation to affected houses

 

புவனகிரி, கம்மாபுரம் வழியாக விருத்தாசலம் வரையிலான சாலை, போக்குவரத்திற்கு தகுந்த நிலையில் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கோரிக்கையின் பேரில், நடைபெற்று வந்த சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக தடைப்பட்டது. இதனால் சாலை குண்டும், குழியுமாகி மேலும் மோசமானது. போக்குவரத்திற்கு தகுந்த நிலையில் இல்லாததால் விருத்தாசலம், புவனகிரி வழியாக சிதம்பரம் வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி குறிஞ்சிபாடி மற்றும் சேத்தியதோப்பு மார்க்கமாகச் சென்றது.

 

இந்நிலையில், சாலையை சரிசெய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் விருத்தாசலத்தில் இருந்து புவனகிரி வரை சாலையமைக்க, தனியார் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், இருவழிச்சாலையை 10 மீட்டர் அகலத்திற்கு அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல, விருத்தாசலத்தில் இருந்து புவனகிரி பங்களா வரை 35 கி.மீ சாலை பணிகளுக்கு விரிவாக்கம் செய்ய, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைத்துறை ரூ.130 கோடி நிதியை ஒதுக்கியது. அதன்படி தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

சாலையோரங்களில் பி.முட்லூர் உள்ளிட்ட சில கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு, இழப்பீடு வழங்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கணக்கு எடுக்கப்பட்டது. அப்போது, அதிகாரிகள் சரியான முறையில் கணக்கு எடுக்காமல் மெத்தன போக்காக செயல்பட்டதால் வீட்டு உரிமையளார்களுக்கு தற்போது இழப்பீடு வழங்குவதில் பாகுபாடு உள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், வீடுகளைக் காலி செய்ய மறுத்து வருவதால், மீண்டும் சாலைப் பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து, விவசாயி தங்கதுரை கூறுகையில், “எனது வீடு சாலை விரிவாக்கப் பணியில் இடிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.  வீட்டைக் கம்பி காலம் அமைத்து இரும்புக் கம்பியுடன் கான்கிரிட் போட்டு கட்டியுள்ளேன், போர்டிகோ உள்ளது. இதனை அதிகாரிகள் கணக்கு எடுக்கும்போது சரியாக ஆய்வு செய்யாமல் வெறும் செங்கல்லால் கட்டப்பட்ட வீடு என்றும் போர்டிகோ, படிகள் இல்லை என்றும் பதிவு செய்துவிட்டனர். இதனால் எனக்கு பக்கத்து வீட்டைவிட ஒரு சதுர அடிக்கு ரூ.1,000 குறைவாக இழப்பீடு வந்துள்ளது. இதனால் நான் பல லட்சத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இவர்கள் கொடுக்கும் இழப்பீட்டை வைத்துக்கொண்டு புதிய வீடு கட்டமுடியால் அவதிப்படுகிறேன். எனக்கு உரிய இழப்பீடு கிடைக்கும்வரை எந்த எல்லைக்கும் போகத் தயார்.” இந்தச் சம்பவத்தால் குடும்பத்துடன் பெருத்த மன உலைச்சலுடன் இருப்பதாகவும் கூறுகிறார். மேலும் இதேபோன்று பலகுடும்பங்கள் பாதிப்பு அடைந்துள்ளது. அவர்களுக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்றார்.

 

Ad

  

இந்தச் சம்பவம் குறித்து விருத்தாச்சலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அன்பு எழிலிடம் கேட்டபோது, "மேல்முறையீடு கொடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
madurai youth karthi incident Relatives involved in the road block

மதுரை மாவட்டம் மதிச்சியம் என்ற பகுதியில் கார்த்திக் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வழிப்பறி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசாரால் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 3 ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மருத்துவ தகுதிச் சான்று வழங்கப்பட்ட பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து 4 ஆம் தேதி திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ஒரே நாளில் சிறையில் இருந்து உடல் நலக்குறைவால் விசாரணை சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். 

madurai youth karthi incident Relatives involved in the road block

இந்நிலையில் இளைஞரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியும், உரிய நிவாரணம் அளிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இன்று (07.04.2024) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

Next Story

‘அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
High Court takes action for Cancellation of the case filed by the ed 

சென்னையில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனமான ஓஷன் லைஃப் ஸ்பேஷஸ் என்ற நிறுவனத்தை எஸ்.பி. பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து தொடங்கி நடத்தி வந்தனர். அதன் பின்னர் தொழிலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இத்தகைய சூழலில் நிறுவனத்தில் இருந்து தனக்கு சேர வேண்டிய பங்கை எஸ்.பி. பீட்டர் தர மறுப்பதாக கூறி ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் எஸ்.பி. பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என எஸ்.பி. பீட்டரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அதனை தொடர்ந்து சுமார் ரூ. 50 கோடி வரை பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் உரிய ஆவணங்களுடன் ஆஜராகுமாறு எஸ்.பி. பீட்டருக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பபட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி. பீட்டர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “இருவருக்கும் இடையேயான தொழில் பிரச்சனையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு. அமலாக்கத்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பித் தர அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தனர்.

High Court takes action for Cancellation of the case filed by the ed 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தரமோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (05.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டுமான நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. எஸ். ராமன் வாதிடுகையில், “நிறுவனத்திற்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது” எனத் தெரிவித்து உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். இதனையடுத்து அமலாக்கத்துறை சார்பில், “மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறக் கோரி மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள்,“ மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதால் அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்க முடியாது. எனவே அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் அமலாக்கத்துறையின் சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களை நிறுவனத்திடம் 4 வாரங்களில் ஒப்படைக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.