Advertisment

மது வாங்கச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி; மர்ம நபர்கள் துணிகரம்!

Two lakh 80 thousand rupees stolen while going to buy liquor

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா எஸ்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன். இவரும் இவருடைய மனைவியும் நைனார்பாளையம் கிராமத்தில் உள்ள கனரா வங்கியில் அடகு வைத்த நகையை மீட்பதற்காகச் சென்றுள்ளனர். அப்பொழுது நகையை மீட்பதற்குத் தாமதமாகும் என வங்கி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

Advertisment

அதனால், தனது மனைவியை பேருந்தில் அனுப்பி வைத்த முருகேசன் தனது இருசக்கர வாகன பெட்டியில் ரூ.2.80 லட்சம் பணத்தை வைத்துப் பூட்டிவிட்டு வி.கிருஷ்ணாப்புரம் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடைக்கு மது வாங்கச் சென்றுள்ளார். பின்பு திரும்பி வந்து பார்த்தபோது பெட்டியை உடைத்து அதிலிருந்து ரூ.2.80 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது.

Advertisment

இது குறித்து கீழ்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Cuddalore police Robbery
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe