Advertisment

வேலைக்குப் போகாத கணவன்; குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி

Two kids passed away mother in critical  near krishnagiri

Advertisment

பர்கூர் அருகே, கணவனுடன் ஏற்பட்ட தகராற்றால் விரக்தி அடைந்த இளம்பெண்தனது இரு குழந்தைகளுக்கும்விஷ உணவு கொடுத்து கொன்றுவிட்டுதானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள செந்தாரப்பள்ளியைச் சேர்ந்தவர் கவுரி (26). இவருடைய கணவர் முத்துராஜ். கெட்டூரைச் சேர்ந்த இவர் பேக்கரி மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஜீவன் என்ற ஆண் குழந்தையும்2 வயதில் பாவனாஸ்ரீ என்ற பெண் குழந்தையும் இருந்தன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக முத்துராஜ் சரியாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கணவன்மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை அவ்வப்போது சமாதானப்படுத்தி வைத்துள்ளனர். ஜன. 17ம் தேதிஅவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவனிடம் கோபித்துக்கொண்டு கவுரிதனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு செந்தாரப்பள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். கணவருடன் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததால் விரக்தி அடைந்த கவுரி, தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். தான் இறந்துவிட்டால் தனது குழந்தைகள் ஆதரவற்றுப் போய்விடுவார்கள் என்று எண்ணிய அவர்.,குழந்தைகளைக் கொன்று விடத்தீர்மானித்துள்ளார். இதையடுத்து, தனது இரு குழந்தைகளுக்கும் விஷ மருந்து கலந்த உணவை சாப்பிடக் கொடுத்துள்ளார். தனது தாய் பாசத்துடன் உணவு ஊட்டி விடுவதாக நம்பிய ஏதுமறியா பிஞ்சுகள், அதை ருசித்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் அந்த உணவை கவுரியும் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மூவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

Advertisment

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கவுரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கந்திக்குப்பம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனையில் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டுதாயாரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் செந்தாரப்பள்ளி பகுதியில் சோகத்தையும்பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Krishnagiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe