Advertisment

பாளையங்கோட்டை மருத்துவமனையிலிருந்த விசாரணைக் கைதிகள் இருவர் மர்ம மரணம்.!!

car

தஞ்சாவூர் மற்றும் அதிராம்பட்டிணம் பகுதிகளில் காரை மறித்து திருடுவதில் கைத்தேர்ந்தவர்களும், பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்களுமான நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த கோடாரங்குளத்தை சேர்ந்த நடராஜன் மகன் முருகேசன், தூத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சி அருகேயுள்ள வாகைகுளத்தை சேர்ந்த பட்டுராஜா மகன் மாணிக்கராஜா என்ற ராஜா மற்றும் அவரது உறவினரான மானூர் மாதவக்குறிச்சியை சேர்ந்த கண்ணம்மா ஆகியோர் நெல்லை மாவட்ட தனிப்படைப் போலீசாரால் சிவந்திப்பட்டி மலை அருகில் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

கைது நடவடிக்கையின் பொழுது போலீசாரிடமிருந்து தப்பிக்க இரு சக்கர வாகனத்தில் தப்பிக்க எத்தனித்த வேலையில், ரெட்டியார்பட்டி மலை அருகில் நாய் குறுக்கே வந்து பாய, நிலை தடுமாறி விழுந்துள்ளனர். கைதுச்செய்யப்பட்டவர்களை மாஜிஸ்திரேட் உத்தரவின் பெயரில் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட, இதில் முருகேசன் 30/03/2018 மாலை 6.30 மணியளவில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இதே போல் அவரைத் தொடர்ந்து சிகிச்சைக்காக இருந்த மற்றொரு விசாரணைக்கைதியான மாணிக்கராஜா இன்று மரணமடைந்துள்ளார். மர்மமான முறையில் இரு விசாரணைக்கைதிகளும் மரணமடைய அங்கு பரப்பரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Advertisment
hospital Palayankottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe