
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கரடி தாக்கியதில் இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பேரண்டூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் ராமகண்ணு -தீர்த்தம்மாள் தம்பதி. இவர்கள் இன்று அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் வழக்கம்போல் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், வழிமறைத்த கரடி ஒன்று இருவர்களையும் தாக்கியது. இருவரும் கூச்சலிட, கரடி ஓடிவிட்ட நிலையில், அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)