Two incident in broad daylight within an hour; Police investigation

Advertisment

திண்டுக்கல்லில் பட்டப் பகலில் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு நபர்கள் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் பொன்மாந்துறை புதுப்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் இருளப்பன். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்த நிலையில், நேற்று மதியம் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருளப்பனை சுமார் ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் நிலத் தகராறு காரணமாகக் கொல்லப்பட்டது தெரியவந்தது.

Two incident in broad daylight within an hour; Police investigation

Advertisment

இருளப்பன் கொலை செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே முத்தழகுபட்டியைச் சேர்ந்த அருளானந்த பாபு என்பவர் ஆர்.வி.நகர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு குப்பைமேட்டில் வீசப்பட்டது தெரியவந்தது. உடனடியாக போலீசருக்குத்தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், முன்பகை காரணமாக அருளானந்த பாபு படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இப்படி திண்டுக்கல்லில் ஒரு மணி நேரத்திற்குள்ளாகப் பட்டப் பகலில் இருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இரு கொலைகள் தொடர்பான நபர்களைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணையைத்தொடங்கியுள்ளனர்.