/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bhvan4343.jpg)
குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தமிழக அணி இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
தேசிய விளையாட்டு போட்டிகள், ஏழு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் பிரவீண் சித்ரவேல் 16.68 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனைப் படைத்தோடு, தங்கப் பதக்கத்தையும் வென்றார். இதேபோல, வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி, 15- 3 என்ற புள்ளிகள் கணக்கில் பஞ்சாப் வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
தேசிய அளவிலான போட்டியில் வாள்வீச்சில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பவானி தேவி தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக அணி இதுவரை இரண்டு தங்கம் உள்பட ஏழு பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)