காப்பகத்தில் இருந்து தப்பிய இரண்டு சிறுமிகள்; போலீசார் தேடுதல்

Two girls who escaped from the shelter; Police searching

சிவகங்கையில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருந்த இரண்டு சிறுமிகள் கழிவறையின் ஜன்னலை உடைத்து தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் 48 காலனி பகுதியில் அரசினர் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை இந்த காப்பகத்தின் கழிவறையின் ஜன்னலை உடைத்துக் கொண்டு 16 வயது கொண்ட இரண்டு சிறுமிகள் தப்பித்துச் சென்றனர். காரைக்குடி மற்றும் தேவகோட்டையை சேர்ந்த அந்த இரு சிறுமிகள் தப்பி ஓடியது தொடர்பாக குழந்தைகள் இல்லத்தின் பொறுப்பாளர்கள் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் தப்பி ஓடிய இரண்டு சிறுமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமிகளைக் கண்டுபிடித்த பின்னரே சிறுமிகள் தப்பி ஓடினரா அல்லது காப்பகத்தில் ஏதேனும் கொடுமைகள் நிகழ்ந்ததா என்ற உண்மை வெளியே வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

police sivakangai
இதையும் படியுங்கள்
Subscribe