விழுப்புரம் மாவட்டம் அருங்குருக்கை மதுரையில் பள்ளி சிறுமிகள் இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம்அருங்குருக்கை மதுரையில் வசித்து வரும் அண்ணாமலை சித்ரா தம்பதியினருக்கு ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் எனமொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் 7 வயது சிறுமி அக்ஷயா ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மற்றொரு குழந்தை ரக்ஷதா அவருக்கு வயது 6.

 Two girls drowned in pool

Advertisment

Advertisment

குழந்தைகளின் பெற்றோர்களான அண்ணாமலை மற்றும் சித்ரா வெளியூர் செல்வதால் சித்தி வீட்டில் மூன்று குழந்தைகளையும் விட்டு சென்றுள்ளார்கள். சிறுவன் வீட்டிலேயே இருக்க, கழிவறை சென்று வருவதாக சென்ற இரு சிறுமிகளும் வேகும் நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி உள்ளனர். அப்பொழுதுசிறுமிகள்இருவரும் அருகில் உள்ள குளத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

அரையாண்டு தேர்வு விடுமுறை சமயத்தில் தற்பொழுது இரு பெண் குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.