Two elephants loss their lives mysteriously; Forest Department investigation

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தருமபுரி மாவட்டத்தின் போடூர் அருகே ஒரு ஆண் யானையும், கோடுபட்டி என்ற இடத்தின் அருகே ஒரு பெண்யானையும் உயிரிழந்துள்ளது. இன்று காலை போடூர் வனப்பகுதி அருகே உள்ள சின்னாற்றில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சம்பவஇடத்திற்குச் சென்ற வனத்துறையினர் யானையின் உடலை மீட்டனர். அதேபோல் கோடுபட்டி என்ற இடத்தில் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்தது.

Advertisment

சின்னாற்றில்உயிரிழந்துமிதந்தயானையின் உடலை மீட்ட வனத்துறையினர் பிரேதப் பரிசோதனை செய்யநடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் குடிக்கும்போது சேற்றில் சிக்கி யானை உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் வனத்துறையினர். அண்மையில் தர்மபுரியில் மட்டும் இதுவரை 6 யானைகள் இதுபோல் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.