
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எல்வனாசூர்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் டீக்கடை தண்டபாணி(57). இவர் அதே பகுதியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அந்த சிறுமி தனது பாட்டியிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பாட்டி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் டீக்கடை தண்டபாணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதேபோன்று, அதே பகுதியில் பள்ளிக்குச் சென்ற 6 ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு தின்பண்டம் வாங்கி கொடுத்து முகமது யாகூப்(58) என்ற நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் டீக்கடை தண்டபாணி, முகமது யாகூப் இருவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயதில் முதிர்ந்தவர்கள் சிறுமியிடம் அத்துமீறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.