Two different incident in Tanjore Thiruvaiyar

லாரி தாறுமாறாக ஓடியதில் கடை வாசலில் தூங்கியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மணகரம்பை ரவுண்டானா பகுதியில் கடை வாசலில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், அவ்வழியே தாறுமாறாக வந்த செம்மண்லாரி கடை வாசலில் தூங்கிக்கொண்டிருந்த செல்வம் என்பவர் மீது ஏறி விபத்து ஏற்பட்ட நிலையில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

அதே தஞ்சை திருவையாறு பகுதியில் மேலும் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. திருவையாறு அருகே உள்ள மருவூர் பகுதியில் அரசின் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தேவகி என்பவர் உயிரிழந்த நிலையில், கல்யாண சுந்தரம் என்பவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இரு வேறு விபத்துகளும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.