madurai

இரண்டு மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய், வீட்டில் வளர்த்து வந்த நாய்க்கும் விஷம் வைத்ததால் அந்த நாயும் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அருண் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்ட நிலையில் அவரது மனைவி வளர்மதி (38), மகள்கள் அகீதா (19) மற்றும் ப்ரீத்தி (17) ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். கணவர் இறந்துவிட்டதால் வளர்மதி மற்றும் இவர்களது பெண் குழந்தைகளும் தங்களது தந்தையை நினைத்து மிகவும் அழுது புலம்பியபடியே இருந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் குழந்தைகளையும் தேற்றமுடியாமலும்,தன்னாளும் பிரிவை தாங்க முடியவில்லை என்பதாலும்,மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.வளர்மதி தனது வீட்டில் தம்பி மகளை வளர்த்து வந்தார். தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன்னர் கீழே உள்ள வீட்டிற்கு மேகலாவை அனுப்பிவிட்டு இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

தற்கொலை செய்வதற்கு முன்னர் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை கடிதமாக எழுதி வைத்துவிட்டு, தங்களிடம் உள்ள நகை மற்றும் பணங்களை வீட்டில் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.மூவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர்கள் வளர்த்த நாய்க்கும் விஷம் கொடுத்துள்ளனர். இதில் அந்த நாயும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

Advertisment

இதுகுறித்து தகவலறிந்த ஒத்தக்கடை காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.