Advertisment

கொலை செய்துவிட்டு வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட உடல்கள்! -இரட்டைக் கொலை பதற்றத்தில் சிவகாசி! 

இன்று அதிகாலையிலேயே பதற்றமானது சிவகாசி. ‘அங்கே ‘சடலம்’ கிடக்கு..இங்கே ‘சடலம்’ கிடக்கு..’ என்று பேசிக்கொண்டார்கள். “நடந்தது ரெண்டுகொலை. ஒரு சடலம்நேருகாலனி மூர்த்தி ஆப்செட் பக்கத்துல கிடக்கு.இன்னொரு சடலம்கார்னேசன் காலனியில கிடக்கு.” என்றார்கள்.

Advertisment

two corpses found in sivakasi

“எங்கோகொலை பண்ணிட்டு, இங்க வந்து போட்டுட்டாங்க. கொலை செய்யப்பட்டரெண்டு பேருமே லோடுமேன்கள். பேரு அர்ஜுனன், முருகன்..” என்று தகவல்சொன்னார்கள். சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவஇடத்துக்கு வந்து இறந்தவர்களின் உடலை ஆம்புலன்ஸில் எடுத்துக்கொண்டுபோயிருக்கின்றனர். அதற்குள் “ரெண்டு இல்ல.. மூணு கொலை..” என்றுயாரோ கொளுத்திப்போட, “இன்னொரு சடலம்எங்கேப்பா?” என்று கேட்டு போலீஸார்திணறித்தான் போனார்கள். அப்புறம் “அதெல்லாம் புரளி.. நடந்ததுரெண்டே கொலைதான்..” என்று ஒரு முடிவுக்கு வந்தனர். விபரமறிந்தவிருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெருமாளும் அரக்கப்பரக்க சிவகாசி வந்துபார்வையிட்டார்.

Advertisment

‘என்ன காரணத்துக்காக யாரால் கொலை செய்யப்பட்டார்கள்? வேறொருஇடத்தில் கொலை செய்துவிட்டு, உடல்களை எதற்காக வெவ்வேறுஇடங்களில் போட்டனர்?’ என சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார்துப்பு துலக்கி வருகின்றனர்.

கொலைகளும் மலிந்துவிட்டனவே!

Sivakasi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe