
சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதில் ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சென்ட்ரல் பகுதியிலிருந்து சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயிலில் மாநிலக் கல்லூரியில் படிக்கும் சர்வேஸ்வரன் என்பவர் அவருடைய மனைவியுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் அவரை கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சர்வேஸ்வரன் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து மின்சார ரயில் விம்கோ நகர் ரயில் நிறுத்தத்தில் நின்ற பொழுது, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருந்த ரயில் பெட்டி மீது கத்தி, கற்கள், மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் பல ரயில் பெட்டிகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டது. இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாகப்புகார் கொடுக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)