Advertisment

அதிமுக பிரமுகர் மணல் திருட்டு நடத்திய இடத்தில் மண் சரிந்து இரண்டு குழந்தைகள் பலி

m1

அதிமுக பிரமுகர் அரசு குளத்தில் அனுமதியில்லாமல் மணல் கொள்ளைநடத்திய இடத்தில் மண் சரிந்து இரண்டு குழந்தைகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது,

Advertisment

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள குத்தாலம் ராஜாகலணியில் உள்ள அரசுக்கு சொந்தமான கொம்புக்காரன் குளத்தில் அதிமுகவை சேர்ந்த மானிக்கவாசகம் என்பவர் அரசு வருவாய்த்துறையினரை சரிசெய்துகொண்டு மணல் கொள்ளை நடத்திவந்தார். அந்த கிராமத்தில் உள்ள ராமமூர்த்தி என்பவர் வீட்டிற்கு கும்பகோணம் பகுதியை சேர்ந்த மகள் வழி பேத்திகள் சியமாலா (7) வர்ஷினி(10) ஆகிய இரண்டு பெண் குழந்தைகளும் வந்திருந்தனர்.

Advertisment

m2

அந்த குழந்தைகள் இரண்டும் அந்த குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, மணல் குடைந்து அள்ளிய பகுதியில் சரிவு ஏற்பட்டு இரண்டு குழந்தைகளும் சிக்கி இறந்தனர்.

அவர்களை தோண்டி எடுத்து மயிலாடுதுறை மருத்துவமனைக்கு முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். நாளை 18 ம் தேதி மயிலாடுதுறைக்கு முதல்வர் பழனிச்சாமி வருவதை யொட்டி ஏற்பாடுகள் பலமாக இருந்துவரும் நிலையில் இரண்டு குழந்தைகளின் இறப்பு பெரும் பரப்பானது.

இந்தநிலையில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் சீர்காழி அதிமுக எம்,எல்,ஏ பாரதி, மயிலாடுதுறை அதிமுக எம்,எல்,ஏ ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆர்டிஒ,தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என அனைத்து தரப்பினரும் விரைந்துவந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு இடையில் மணல் திருடிய மானிக்கவாசகத்தை கைது செய்வது, அதிகாரிகள் மீது நடவடிக்கை , முதல்வர் நிவாரன நிதியை பெற்றுத்தருவது என்பன உத்தரவாதங்களை கொடுத்து இரண்டு எம்,எல்,ஏக்களும் தலா ஐம்பதாயிரம் வழங்கி கூட்டத்தை களைத்து பெருமூச்சுவிட்டனர்.

Thiruvarur nagai aiadmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe