
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வேலம்பட்டு கேட் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன்-பிரியா தம்பதியினர். இவர்களுக்கு மகள் ப்ரீத்தி ஷா (8), மகன் ஈஸ்வர் (5) உள்ளனர். மணிகண்டனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதிதாக வீடுகட்டி வரும் நிலையில் வீட்டின் அருகாமையில் தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை நீர் முழுமையாக நிரம்பி இருந்தது. இந்நிலையில் இன்று அக்கா பிரியதர்ஷினி மற்றும் தம்பி ஈஸ்வரன் இருவரும் தண்ணீர் தொட்டியின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்தபோது தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கி இருந்த மழை நீரில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இரண்டு குழந்தைகளையும் மீட்டு லத்தேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து லத்தேரி காவல் துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.