ADVERTISEMENT

குப்பைக் கிடங்கில் கிடந்த பட்டாசு கழிவு; சிறுவர்களுக்கு நிகழ்ந்த சோகம்

06:43 PM Jan 02, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விதியை மீறி பொது வெளியில் கொட்டப்படும் பட்டாசு கழிவுகளால் சிறுவர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள தாயில்பட்டியில், துறை அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு உற்பத்தி செய்பவர்கள் பட்டாசு கழிவுகளை பிரபல பட்டாசு ஆலைக்கு எதிரில் உள்ள கல் கிடங்கில் போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். குப்பைக் கிடங்கில் பட்டாசுக் கழிவுகளைப் போடக்கூடாது என்பது தெரிந்திருந்தும், விதி மீறலாக இதைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் ஆர்வத்திலிருந்த வேலாயுதமும்(வயது 9),வைரமும் (வயது 14) குப்பைக் கிடங்கில் கிடந்த பட்டாசுகளைக் கொண்டு வெடிக்கும்போது அருகிலிருந்த பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்ததில் படுகாயமடைந்தனர். இவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT