/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/000001-fire-art-img.jpg)
விதியை மீறி பொதுவெளியில் கொட்டப்படும் பட்டாசு கழிவுகளால் சிறுவர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விருதுநகர்மாவட்டம்சாத்தூர்அடுத்துள்ள தாயில்பட்டியில், துறை அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு உற்பத்தி செய்பவர்கள்பட்டாசு கழிவுகளைபிரபலபட்டாசு ஆலைக்கு எதிரில் உள்ள கல் கிடங்கில் போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். குப்பைக் கிடங்கில் பட்டாசுக் கழிவுகளைப் போடக்கூடாது என்பதுதெரிந்திருந்தும்,விதி மீறலாகஇதைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,ஆங்கிலப்புத்தாண்டைமுன்னிட்டுபட்டாசுவெடிக்கும்ஆர்வத்திலிருந்த வேலாயுதமும்(வயது9),வைரமும்(வயது14)குப்பைக்கிடங்கில்கிடந்தபட்டாசுகளைக் கொண்டு வெடிக்கும்போதுஅருகிலிருந்த பட்டாசுகள் தீப்பிடித்துவெடித்ததில்படுகாயமடைந்தனர். இவர்களைஅங்குஇருந்தவர்கள் மீட்டு சிவகாசிஅரசுமருத்துவமனையில்சேர்த்தனர்.
இந்தவெடி விபத்துகுறித்துவெம்பக்கோட்டைகாவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)