ஒரே நாளில் விசாரணைக்கு வரும் இரு வழக்குகள்; எகிறும் எதிர்பார்ப்பு

 Two cases to be heard on the same day; Soaring expectations

அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்புஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

அண்மையில் உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு வரும் 30 ஆம் தேதி (வரும் திங்கட்கிழமை) விசாரணைக்கு வர இருக்கிறது. அதேபோல், அதிமுகவில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையின் நகலைக் கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. அந்த வழக்கின் விசாரணைஅக்.30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு உச்சநீதிமன்றத்தில், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை நகலைக் கோரும் வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்திலும் ஒரே நாளில் விசாரணைக்கு வர உள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

supremecourt
இதையும் படியுங்கள்
Subscribe