Advertisment

 சூலூர் நீலாம்பூர் பைபாசில் 2 கார்கள்  மோதி விபத்து - 3 பேர் பலி

ca

கோவை நீலம்பூர் புறவழிச்சாலையில் இரு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

car

கோவை சேரன்நகர் பகுதியை சேர்ந்த சிதம்பரநாத்,கௌதம், கோகுல்நாத் ஆகியோர் நண்பர்கள் சிலருடன் கிரிக்கெட் விளையாடி விட்டு காரில் திரும்பிக்கொண்டு இருந்தனர். கார் நீலம்பூர் புறவழிச்சாலையில் வந்து கொண்டு இருந்த போது முன்னாள் சென்று கொண்டு இருந்த இரு சக்கர வாகனத்தை முந்த முயன்றனர். அப்போது நிலைதடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் எதிரே வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் வந்த கல்லூரி மாணவன் கௌதம், கோகுல்நாத், சிதம்பரநாத் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வினித், சுபிஜித் தேவ், விக்னேஷ்வர்,மோகித், சூர்யா, சல்மான் பாரிஸ் மற்றும் அடையாளம் தெரியாத நபர் என 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த 7 பேர் கோவை புறவழிச்சாலையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisment

இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதி விரைவாக வாகனம் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

car accindent kovai sulur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe