கல்குவாரி குட்டையில் குளியல்; இரண்டு சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்

 Two boys who went to bathe in Kal queries drowned

வேலூர் அடுத்த பெருமுகை பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில், செயல்படாத கல்குவாரி குட்டை உள்ளது. இந்தக் குவாரி குட்டைக்கு குளிக்க சென்ற வள்ளலார் பகுதியைச் சேர்ந்த பாலாஜி மகன் சரவணன்(15) மற்றும் மதன்குமார் மகன் அவினாஷ்(15) ஆகிய இருவரும் நீச்சல் தெரியாமலலேயே குட்டை நீரில் குளிக்க இறங்கிய நிலையில், தவறி விழுந்து நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர், வேலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்த நிலையில், தீயணைப்பு துறையினர் கல்குவாரி குட்டையில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர தேடுதலுக்குப் பின் சிறுவர்களின் சடலத்தை மீட்டனர்.

சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை தினம் என்பதால், நான்கு சிறுவர்கள் வீட்டிற்கு தெரியாமல் கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றதாகவும், அதில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

police Vellore
இதையும் படியுங்கள்
Subscribe