Advertisment

திருத்தங்கல் கண்மாயில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

 Two boys lost their lives after drowning in Thiruthangal Kanmai

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது திருத்தங்கல், முத்து நகர். இந்த பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் நான்கு பேர் இன்று நண்பர்களாக சேர்ந்து திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய்க்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்பொழுதுகண்மாயில்இறங்கிய மாணவர்களில் எதிர்பாராத விதமாக இருவர் நீரில் மூழ்கினர். உடனடியாக போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் இரண்டு சிறுவர்களின் உடல்களைகைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

அண்மையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் விளையாட்டு போட்டிக்காக வந்திருந்த நிலையில் திருச்சி காவிரி ஆற்றில் குளித்தபோது நான்கு சிறுமிகள்நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் விருதுநகரிலும் பள்ளி மாணவர்கள் இருவர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Rescue incident Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe