Advertisment

கடலில் மிதந்த சிறார்களின் உடல்கள்; கதறித் துடித்த பெற்றோர்

Two bodies floating in the sea; Screaming parents

சென்னையில் துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனும் சிறுமியும் கடலில் சடலமாக மிகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

மாதவரம் பால் பண்ணை பகுதியைச்சேர்ந்தவர் ஸ்ரீசாந்த் மற்றும் சந்தியா சிறுவர்சிறுமியான இவர்கள் அண்மையில் காணாமல் போனதாக இரு வீட்டாரின் பெற்றோர்களும் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இருவர் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் இருவரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்குத்தகவல் கிடைத்தது.

Advertisment

துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவனின் சடலமும், சிறுமி ஒருவரின் சடலமும் இருந்தது. விசாரணையில் அது காணாமல் போன ஸ்ரீசாந்த் மற்றும் சந்தியா என்பது தெரிய வந்தது. இந்தத்தகவல் குறிப்பிட்ட சிறுவன், சிறுமியின் பெற்றோருக்குச் சொல்லப்பட்ட நிலையில் அவர்கள் பதறி அடித்துக்கொண்டு கதறியபடி ஓடிவந்து சடலங்களைப் பார்த்து அழுதது அங்கிருப்போரை கண்கலங்க வைத்தது. இருவரின் உடலையும் போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது தற்கொலையா? அல்லது கொலையா? என்று தொடர்பாக தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident police Beach Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe