Advertisment

சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை!

Two man arrested under pocso Act for molesting 13-year-old girl

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 13 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 13 வயது சிறுமியை மிரட்டி இருவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதை வெளியே சொன்னால் சிறுமியின் பெற்றோரை கொலை செய்து விடுவோம்என மிரட்டி பலமுறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருகின்றனர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை கவனித்த பெற்றோர்சிறுமியிடம் விசாரித்தபோது, நடந்த விசயத்தை கூறியுள்ளார், இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சிறுமியை வன்கொடுமை செய்த மதிசுவர் கருவேப்பிலை முனியாண்டி(37), பங்க் கடை பீடி சந்திரன்(55) ஆகிய இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

arrested POCSO police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe