கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி சத்திரம் பேருந்து நிலையம் சித்ரா ஹோட்டல் முன்பு ஒரு நபரை கொலை செய்தது தொடர்பாக, கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கில் மணிகண்டன், அர்ஜுனன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் விசாரணையில் மேற்படி வழக்கின் குற்றவாளியான மணிகண்டன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகளும், அர்ஜுனன் மீது 3 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, இவர்கள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வந்ததால் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யபட்டனர்.