கோயில் உண்டியலைத் திருட முயன்ற இருவர் கைது

Two arrested for trying to steal temple bills

கோயில் உண்டியலைத் திருட முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், மேச்சேரியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் அடையாளம் தெரிய நபர்கள் அங்குள்ள உண்டியலை உடைக்க முயன்றுள்ளனர். எனினும், உண்டியலை உடைக்க முடியாத நிலையில், உண்டியலை அப்படியே தூக்கிச் சென்றனர். இதனைக் கண்ட லோகநாதன் என்பவர் கூச்சலிடவே உண்டியலை புதரில் வீசிவிட்டு திருடர்கள் தப்பியோடிவிட்டனர்.

இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு பேர் உண்டியலை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், தீபன், தீபன்ராஜ் ஆகியோர் உண்டியலை தூக்கிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

temple
இதையும் படியுங்கள்
Subscribe