சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேராசிரியர் அன்பழகனின்நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அதன்பிறகு அவர்அங்கிருந்து கிளம்பிச் சென்ற நிலையில், இரண்டு திமுக தொண்டர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 22 வயதான பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாகப் புகார்எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, திமுக தொண்டர்களான சென்னை கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன், ஏகாம்பரம் ஆகியோரை அக்கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன்உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பிரவீனும்ஏகாம்பரமும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் இரு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.