Two arrested in Trichy airport for gold

Advertisment

இன்று காலை சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயணிகளிடம் திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது கடலூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 152 கிராம் எடை கொண்ட ரூ7.65 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.

அதேபோன்று துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் சோதனையிட்டதில் நாகை மாவட்டம் பழையாறையைச் சேர்ந்த முகமது சாதிக் என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 1,128 கிராம் எடைகொண்டரூ56.61 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

மேலும் அதே விமானத்தில் பயணித்த தஞ்சையைச் சேர்ந்த முகமது ஜியாவுதீன் சாகிப் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த 896 கிராம் தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.44.97 லட்சம்.

Advertisment

தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் முகமது சாதிக் மற்றும் முகமது ஜியாவுதீன் சாகிப் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 2,176 கிராம். இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 853 என்பது குறிப்பிடத்தக்கது.