Two arrested in trichy

Advertisment

திருச்சி மாவட்டம், முசிறி பாரதி நகா், புகழேந்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் பாலியல் தொழில் செய்வதாக முசிறி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் முசிறி காவல்துறையினா் அந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டனா். அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 43 வயது மற்றும் 33 வயதுடைய இரு பெண்களை காவல்துறையினா் மீட்டு காஜாமலை சொந்தம் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனா். மேலும் அவா்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்திய முசிறி, ஜெயகொண்டம் பகுதியை சோ்ந்த தமிழ்செல்வி (50) மற்றும் தொட்டியம், மணமேடு செட்டியார் தெருவை சோ்ந்த மணிவேல் (40) ஆகிய இருவரையும் காவல்துறையினா் கைது செய்தனா்.