
தமிழக பாஜகவில் ரவுடிகளுக்கு பதவிகள் வழங்குவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவது வழக்கம். இந்த நிலையில் வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிக்கு பாஜகவில் பதவி தந்ததற்கு நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளில் ஒருவர் ரவுடி அருண்குமார். இவர் பாஜகவில் இணைந்த நிலையில், அண்மையில் அவருக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டது. ரவுடி அருண்குமாருக்குபாஜகவில் பதவி வழங்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் விழுப்புரத்தைச் சேர்ந்த பாரதி, வந்தவாசியைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவர் சென்னையில் பல பகுதிகளில் 'பதவி கொடுத்ததற்கு நன்றி' எனத்தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டி இருந்தனர். இந்நிலையில் சுவரொட்டியை ஒட்டிய பாரதியையும், ரமேஷையும்போலீசார் கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)