Advertisment

மது அருந்த மருத்துவக்கல்லூரியில் திருட்டு; பெண் உள்பட இருவர் கைது

Two arrested for stealing pipe from medical college to consume liquor

Advertisment

அரியலூர் மாவட்ட தலைநகரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது 5 மாடிகள் கொண்ட இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஏராளமான பொதுமக்கள் நோயாளிகள் வந்து செல்கிறார்கள். இந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடி பார்வையாளர்கள் நோயாளிகள் பயன்படுத்துவதற்காக கழிவறை, குளியலறை கட்டப்பட்டுள்ளன

இப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பைப்புகள் கடந்து சில நாட்களாகக் காணாமல் போனது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் யார் இந்த பைப்புகளைத்திருடுவது யார்என்பதை கண்டறிவதற்காக ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அரியலூர் சேர்ந்த செந்தில்குமார், ஏழேரியைச் சேர்ந்த சென் ரோஜா ஆகிய இருவர் கடந்த சில நாட்களாக பைப் லைனை தினசரி திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து அரியலூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் இருவரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும், மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த பைப்புகளை கழட்டிச் சென்று அதை விற்று டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TASMAC Theft Ariyalur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe