Two arrested for stealing old woman's bag from a moving train

Advertisment

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் 19 ஆம் தேதி மாலை சென்னையைச் சேர்ந்த மரியம்மா ஜான் என்ற மூதாட்டி பயணம் செய்துள்ளார். ஈரோடு ரயில் நிலையம் அருகே ரயில் வந்து கொண்டு இருந்த போது மூதாட்டி மரியம்மா ஜானின் கைபையில் வைத்து இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூபாய் ஐயாயிரம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் அந்த கைப்பை திருட்டு போகியுள்ளது.

கைப்பை தொலைந்து போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி ஈரோடு ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் ஓடும் ரயிலில் திருட்டில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த ராஜா, கரூரைச் சேர்ந்த கணேஷ் குமார் ஆகிய இரு இளைஞர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 7 பவுன் நகையை ரயில்வே இருப்பு பாதை காவல்துறையினர் மீட்டனர். மேலும் இந்த இரு நபர்கள் மீது திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குற்ற வழக்குகள் உள்ளது எனத்தெரிய வந்தது.