Advertisment

எஸ்.பி. அலுவலகத்தில் 33 வாக்கி டாக்கி திருடி விற்ற 2 பேர் கைது!

திருச்சி எஸ்.பி. அலுவலகம் சுப்ரமணியபுரத்தில் உள்ளது. புறநகர் மாவட்ட காவல்நிலையங்களுக்கு தலைமை இடமாக இது விளங்குகிறது. இந்த காவல்நிலைய அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்கிடாக்கிகளில் பயன்படுத்தப்பட்டு நாள் கணக்கில் ஆனபின்பு ரிப்பேர் ஆகும் வாக்கி டாக்கிகளை எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள குடோனில் வைத்து விடுவது வழக்கம்.

Advertisment

police

இந்நிலையில் நேற்று முந்தினம் வாக்கிடாக்கிகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்ட போது குடோனில் வைத்திருந்த 33 வாக்கி டாக்கி, 11 கையடக்க மைக் காணாமல் போய் இருப்பது தெரியவந்த போது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வாக்கி டாக்கிகள் அனைத்தும்சென்னைக்கு மீண்டும் ஒப்படைக்க வேண்டியது என்பதால் இதுகுறித்து உடனே விசாரணைக்கு உத்தரவிட்டார் எஸ்.பி.

Advertisment

விசாரணையில் எஸ்.பி. அலுவலகத்தில் தனியார் துப்புரவு பணியாளர் சீனிவாசன் என்பவர் எப்போதும் எஸ்.பி. அலுவலக அறைகளை சுத்தம் செய்வது வழக்கம் என்பதை அவரை அழைத்து விசாரணை நடத்திய போது குடோனை சுத்தம் செய்யும்போது இந்த வாக்கி டாக்கிகளை பார்த்தாகவும் தினமும் ஒன்று என்கிற ரீதியில் எடுத்து சென்று கனகராஜ் என்பவரிடம் விற்றதாக வாக்குமூலம் கொடுக்க உடனே திருச்சி மாநகர போலிஸ் கே.கே.நகர் காவல்நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டு இரணடு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

arrest police Theft thiruchy walkies
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe