Advertisment

சோதனையில் சிக்கிய இருவர்; காப்புப்போட்ட காவல்துறை!

Two arrested for smuggling one kg of cannabis in Trichy

திருச்சி கருமண்டபம் பகுதியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருச்சி மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஆய்வாளர் சுப்புலட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் உமா சங்கரி தலைமையில் போலீசார் தீரன் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisment

இந்த நிலையில், அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்துள்ளது. அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் கஞ்சாவை எடுத்து வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் பிரகாஷ் மற்றும் மனோஜ் என்பதும் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. விற்பனைக்காக அந்தக் கஞ்சாவை அவர் எடுத்துச் சென்றுள்ளதும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனை அடுத்து கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Advertisment
arrested police Cannabis
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe