Published on 24/01/2022 | Edited on 24/01/2022

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிக்கு அடுத்துள்ள தேவராயனேரி என்ற பகுதியில் நரிக்குறவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு நரிக்குறவர்களிடமிருந்து புலிப்பற்கள், யானைத்தந்தங்கள் மற்றும் யானை முடி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்குத் தொடர்ந்து பல புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, வனத்துறையினரும் நேற்று அதிரடியாக அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அருண் பாண்டி மற்றும் சௌந்தர்ராஜன் ஆகிய இருவரும் புலி நகம் மற்றும் நரியின் பற்கள், யானைத்தந்தம் உள்ளிட்டவற்றை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த வனத்துறையினர் அவர்களைத் திருவெரும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.