Published on 31/01/2022 | Edited on 31/01/2022

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், நந்தகுமார் ஆகிய இருவரை மணப்பாறை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும் 2 செல்போன்கள், ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் லாட்டரி சீட்டுகள் உள்ளிட்டவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மணப்பாறை காவல்துறையினர், இருவரையும் சிறையில் அடைத்தனர்.