/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/10_162.jpg)
திருவண்ணாமலை மாவட்டம் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(45) மற்றும் ராஜ்குமார்(36) இருவரும் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து அதனை வசூல் செய்து வந்துள்ளனர். நண்பர்களாகிய இருவரும் பணம் கொடுத்த நபர்களிடம் இருந்து வட்டியுடன் பணத்தை வசூல் செய்து வந்திருக்கின்றனர். அந்த வகையில் கணவனை இழந்த பெண் ஒருவருக்கு இவர்கள் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் வட்டி பணத்தை வாங்குவதற்காக கணவனை இழந்த அந்த பெண் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது, அந்த பெண்ணின் மகளுக்கு(பள்ளி மாணவி) இருவரும் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. மேலும் நடந்ததை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் நடந்த சம்பவத்தை அந்த சிறுமி தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மாவட்ட குழந்தைகள் பிரிவு நல அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மூலம் செல்வராஜ் மற்றும் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், இருவரும் சம்பந்தப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதைத் தொடர்ந்து, இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)