திருச்சி வன சரக அலுவலர் கோபிநாத் தலைமையிலான தனிக்குழுவினர்,லால்குடி - குமுளூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவரைதடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவர்களிடம் இறந்த நிலையில்உடும்பு ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் வயல்வெளியில் கண்ணி வைத்து வேட்டையாடி எடுத்துவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, உடும்புவேட்டையாடிய சின்ராசு, திருமலை ஆகிய அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் 1, கண்ணிகள் 10, அலைபேசி 2 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.