style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஈரோடு சாஸ்திரி நகரில் உள்ள ஒரு வீட்டில்12-ஆம் தேதி காலை வெடிவிபத்து நடந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உடல் சிதறிஇறந்தனர். மேலும் சிலருக்கு காயம் மற்றும்10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. இச்சம்பவத்தை விசாரித்த ஈரோடு போலீசார் இன்று இரண்டு பேரை கைது செய்துள்ளனர். வடுகப்பட்டியை சேர்ந்த மங்கமுத்து என்பவர் சட்ட விரோதமாக அதிக சக்திகொண்ட வெங்காய வெடிகளை தயாரித்ததாகவும் அந்த வெடி பெருட்களை சுகுமாரன் என்பவர் பதுக்கி வைத்ததாகவும் இந்த வழக்கில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.