சென்னை வேளச்சேரி பகுதியில் வேட்பாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இத்தேர்தலுனுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துவரும் நிலையில், பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகள் ஏதேனும் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், வேளச்சேரி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுகவிவைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடமிருந்த 23 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.