இரண்டு ஏ.டி.ஜி.பி.க்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஏ.டி.ஜி.பி. ஆபாஷ்குமாருக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை பயிற்சி அகாடமி ஏ.டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் காவலர் பயிற்சிக் கல்லூரி டி.ஜி.பி.யாகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி ராஜ்பவன் முகாம் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.