Two accused arrested under goondas act

Advertisment

சேலத்தில்சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த பின்னரும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த இரண்டு ரவுடிகளைக் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

சேலம் அம்மாபேட்டை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பாஷா. இவருடைய மனைவி உமைபானு. இவரை முன்விரோதம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி மர்ம நபர்கள் கொலை செய்தனர். காவல்துறை விசாரணையில், சேலம் பொன்னம்மாபேட்டை தெற்கு ரயில்வே லைன் தெருவைச் சேர்ந்த பாஷா மகன் அப்சர் என்கிற சொச்சோ (29), திப்பு நகர் மஜித் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரகுபதி (29) ஆகியோரின் கூட்டாளிகள்தான் கொலை செய்தனர் என்பது தெரியவந்தது.

Two accused arrested under goondas act

Advertisment

இதையடுத்து, கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் அவர்கள் இருவரும் பிணையில் விடுதலை ஆனார்கள். இந்நிலையில், கடந்த செப். 24ஆம் தேதி, அம்மாபேட்டை ஜோதி திரையரங்கம் அருகே வசித்துவரும் சாபீர் என்பவர் வீராணம் ஜெயம் மருத்துவமனை அருகே வந்தபோது அவரை வழிமறித்து, கத்திமுனையில் 1,400 ரூபாய் மற்றும் செல்ஃபோன் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த அம்மாபேட்டை காவல் நிலைய காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர். சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவந்ததால் அப்சர் மற்றும் ரகுபதி ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகரக் காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.

Advertisment

அதன்படி, அவர்கள் இருவரும் அக். 18ஆம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் குண்டர் சட்ட கைது ஆணை கொடுக்கப்பட்டது.