Advertisment

சுண்ணாம்பு குவாரியில் வீசப்பட்ட இரட்டை ஆண் சிசுக்கள்..!

Twin male babies thrown in a limestone quarry

Advertisment

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ஆதனக்குறிச்சி கிராமம். இந்தக் கிராமத்தின் அருகே தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்பு கல் குவாரி உள்ளது. இந்தக் குவாரி பள்ளத்தில் இரட்டை ஆண் குழந்தை சிசுக்கள் கிடந்துள்ளன. அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் அதைப் பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட தளவாய் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கதிரவன், சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் சிசுக்கள் கிடந்த இடத்தை ஆய்வு செய்து, இந்த இரண்டு சிசுக்களையும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கிருந்த மருத்துவ அதிகாரிகள் சிசுக்களை ஆய்வு செய்வதற்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தளவாய் போலீசார் வழக்குப் பதிவுசெய்து இரட்டைசிசுக்களை சுண்ணாம்புக் கல் குவாரியில் வீசிச் சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 8 மாதமான இரு குழந்தைகள், குறைப்பிரசவத்தில் உயிரற்று பிறந்த குழந்தைகள் என மருத்துவ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சிசுக்கள் தவறான முறையில் யாருக்காவது பிறந்ததா அல்லது திருமணத்திற்கு மீறிய உறவுமூலம் இந்த சிசுக்கள் உருவாகி, அதை அரைகுறையாக பிரசவிக்கப்பட்டு, அப்படி பிறந்த சிசுக்களைசிதைத்து இங்கு கொண்டு வந்து வீசிவிட்டு சென்றுள்ளனரா? இப்படி பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ariyalur baby twins
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe